Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் செல்லலாம் என எச்சரிக்கை...!!

 


நாட்டில் கொவிட் மரணங்கள் அதிகரித்தாலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை காணக்கூடியதாய் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.


ராகம போதனா வைத்தியசாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பயணக் கட்டுப்பாட்டை அரங்சாங்கம் தற்போது நீட்டித்துள்ளது. மருத்துவ பார்வையில் இது மிகவும் நல்லது. எனினும் நாட்டு மக்களுக்கு அசௌகரியும் உள்ளது. தற்போது நோயாளர்கள் குறைவடைந்து வருகின்றனர். மரணங்கள் குறைவடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் செல்லும். உருமாறிய புதிய வைரஸ் காரணமாக தொற்று ஏற்பட்டு 10 நாட்களுக்குள் மரணம் ஏற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments