Advertisement

Responsive Advertisement

நாட்டில் ஒன்பது இடங்களில் அல்பா வைரஸ்



அல்பா எனும் பிரித்தானிய கொரோனா வைரஸ் வகைத் தொற்றாளர்கள் நாட்டின் 9 பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

பிரித்தானியக் கொரோனா வைரஸான B117 (அல்பா) வகைக் கொரோனா வைரஸ் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹாராம, கராப்பிடிய, ராகம ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய வகைக் கொரோனா வைரஸான டெல்டா நாட்டின் இரு பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments