Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் முகக்கவசம் கண்டுபிடிப்பு...!!

 


உலகம் பூராகவும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றது.


இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புது புது வகை முகக்கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், இந்தியாவில் கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் முகக்கவசம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஒரு புதிய நிறுவனம், முப்பரிமாண அச்சிடல் மற்றும் மருந்தியலை ஒருங்கிணைத்து ஒரு முகக்கவசத்தை தயாரித்துள்ளது.

இந்த முகக்கவசத்தை தொடும் கொரோனா வைரஸ் செயலிழந்துவிடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் உறுதி அளித்துள்ளது.

திங்கர் டெக்னாலஜிஸ் என்ற அந்த புனே நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய முகக்கவசத்தில், விருசிடேஸ் எனப்படும் வைரஸ் எதிர்ப்புபொருள், பூசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments