Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து! இராணுவத்தளபதியின் அறிவிப்பை ஏற்றுக் கொண்ட இராஜங்க அமைச்சர்


மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக அடுத்த வாரம் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா தொற்று அனர்த்த நிலை இன்னும் குறைவடையவில்லை என இராணுவத்தளபதி எமக்கு அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தீர்மானம் மாகாணங்களுக்கிடையில் பஸ் அல்லது ரயில் சேவைகள் இடம்பெறக்கூடாது என்பதாகும்.

இந்த தீர்மானத்தை மதிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments