Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அனைத்து வகையான உரங்களையும் இலங்கையில் தயாரிக்க நடவடிக்கை...!!

 


நாட்டிற்கு தேவையான அனைத்து உரங்களையும் இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழிநுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த துறையின் நிபுணர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்காலத்தில் இந் நாட்டு விவசாயிகளுக்கு தேவையான கரிம உரங்களை வழங்க முடியும்.

மேலும், கரிம உற்பத்திக்கு தேவையான பின்னணியையும் அரசாங்கம் தயார் செய்து தரும் என்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments