செ.துஜியந்தன்
இன்று அம்பாறை உஹன பிரதேசத்தில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதற்கட்ட தடுப்பு மருந்து ஏற்றும் செயற்திட்டம் ஆரம்பித்துவைக்கப்ட்டது.
அம்பாறை மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றள்ளது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது
இங்கு உஹன பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என 292 பேருக்கு இன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என உஹன பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ.குமாரி தெரிவித்தார்.
உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முன் தடுப்பூசிபற்றிய விளக்கம் மற்றும் இதனை யார் யார் பெற்றுக்கொள்ள உடற்தகைமை கொண்டுள்ளனர் போன்ற விபரங்கள் சுகாதாரத்தரப்பினரால் வழங்கப்பட்டு அதன் பின் உரியவர்களிடம் சம்மதத்தை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின் பயனாளிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்ட்டது.
இன்று தடுப்பூசி ஏற்றப்ட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒரு மாத இடைவெளிக்குள் வழங்கப்படும் என உஹன பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி என்.லியனகே தெரிவித்தார்.
இங்கு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி அட்டைகள் வழங்கப்பட்டதுடன் 20 நிமிட ஓய்வுக்கு பின் அலுவலகம் செல்லுமாறு அறிவுறுத்தப்படடனர். இச் செயற்திட்டத்தினை உஹன பிரதேச செயலகத்துடன் இணைந்து உஹன பிராந்திய சுகாதாரப்பணிமனை ஏறபாடு செய்திருந்தமை கறிப்பிடத்தக்கது.

0 Comments