Advertisement

Responsive Advertisement

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் வாகனத்தில் இருந்து குதித்து உயிரிழப்பு...!!

 


தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவல்துறையின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்து உயிரிழந்த சம்பவமொன்று பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.


48 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (06) கைது செய்யப்பட்டு காவல்துறையின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வண்டியிலிருந்து வெளியே பாய்ந்தபோது கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவ்ததையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்த உப காவல்துறை அதிகாரியும் காவல்துறை பரிசோதகரும் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments