Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கற்பூரம் எனக் கூறி 5.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மஞ்சள் இறக்குமதி!

 


கற்பூரம் (Refined Naphthalene) இறக்குமதி செய்வதாகக் கூறி இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 5.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 15,251 கிலோ விரலி மஞ்சளை சுங்கத்திணைக்களத்தினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.


கற்பூரப் பெட்டிகள் உள்ளதாக கூறப்பட்ட கொள்கலனுக்குள் அடுக்கி வைக்கப்படிருந்த 507 பெட்டிகளை சோதனையிட்டபோது அவற்றுக்குள் விரலி மஞ்சள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கவேண்டிய 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட வரி வருமானம் இழக்கப்பட்டுதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து இறக்குமதியாளருக்கு எதிராக அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவிக்கிறது.

Post a Comment

0 Comments