Home » » பஸ் மற்றும் ரயில்களும் தமது சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

பஸ் மற்றும் ரயில்களும் தமது சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

 


பயணிகள் பற்றாக்குறை காரணமாக அனைத்து பஸ் மற்றும் ரயில்களும் தமது சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளன.


இது தொடர்பில் பேசிய இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலவைர் கெமுனு விஜேரத்ன,

பஸ் சேவையினை 25 சதவீதமாக மட்டுப்படுத்தவுள்ளதாகவும், அவற்றுள் நீண்டதூர சேவைகளும் அடங்கும் என்றும் கூறியுள்ளார்.

பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த போக்குவரத்தை பயன்படுத்துவதானல் பஸ் சேவைகள் குறைந்துள்ளதாகவும், இருப்பினும் அலுவலக போக்குவரத்து சேவைகள் செயற்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக பஸ்கள் சேவைக்காக ஒதுக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாகாண டிப்போ தலைவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு தங்கள் சேவையைத் தொடர அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் இந்த வாரம் இறுதி வரை ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் காமினி சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அடுத்த வாரத்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |