Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நாளை புயலாக மாறும் – மக்களுக்கு எச்சரிக்கை!

 


வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை (திங்கட்கிழமை) புயலாக மாற்றமடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு அந்தமான் கடல் பிரதேசம் மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்திலும் கடல் திடீரென கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதுடன், 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Post a Comment

0 Comments