Advertisement

Responsive Advertisement

கொக்கட்டிச்சோலையில் பயணத்தடை நேரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!


 மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணத்தடை நேரத்தில் கசிப்பு உற்பத்தி நடாத்திய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.


இன்று அதிகாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் உள்ள களப்பு பகுதியிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முனைக்காடு களப்பு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது ஆறு பரல் கோடா மீட்கப்பட்டதுடன் உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பு ஒரு தொகுதியும் மீட்கப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களும் மீட்கப்பட்டன.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் குணவர்த்தனவின் வழிகாட்டலின் கீழ் கொக்கட்டிச் சோலை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அமரசிறி,போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் கமல் தலைமையில் சென்ற சாஜன் ரத்நாயக்க,பொலிஸ் உத்தியோகத்தர்களான சந்திரகுமார்,ஐங்கரன்,சிந்துஜன்,ரமேஸ் பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments