Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியும் பொலிஸார் அனுமதிக்காமல் முறுகல்!

 


பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் சுகாதார நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையின் பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு, சட்டத்தரணி தனஞ்சயன் மற்றும் முன்னாள் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்; ஆண்டிஐயா புவனேஸ்வரன் உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்


இதன்போது, குறித்த பகுதியில், பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், இவ்விடத்துக்குள் செல்ல முடியாது எனத் தெரிவித்த பொலிஸார், அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, குறித்த தரப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

Post a Comment

0 Comments