Home » » மட்டக்களப்பில் 66 பேருக்கு கொரோனா தொற்று- மூன்று கிராமசேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த பரிந்துரை...!!

மட்டக்களப்பில் 66 பேருக்கு கொரோனா தொற்று- மூன்று கிராமசேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த பரிந்துரை...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று இன்று திங்கட்கிழமை (17) மாலை 6 மணிவரையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சின்ன ஊறணி, திருச்செந்தூர், கல்லடி வேலூர் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு , ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளின்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி தொடக்கம் திங்கட்கிழமை மாலை 6 மணிவரை இரு கர்ப்பணிதாய்மார்கள் ,ஒரு சுகாதார வைத்திய அதிகாரி உட்பட 66 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய மாவட்டத்தில் 1502 பேராக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. 3 வது கொரோனா அலையில் 10 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கொரோனா தொற்று றோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சின்னஊறணி , திருச்சொந்தூர் , கல்லடி வேலுர் கிராமசேவகர் பிரிவு ஆகிய 3 கிராமசேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தி முடக்க தேசிய கொரோனா தடுப்பு பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |