Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

 


எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 31ஆம் திகதி வரையான 2 வார காலப்பகுதியில் அடையாள அட்டை இலக்க முறைக்கமைய வீட்டில் இருந்து வெளியே செல்லும் நடைமுறை அமுலாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை திட்டமிடும் போது அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அடையாள அட்டை இலக்கத்திற்கமைய ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அதற்கு எதிராக செயற்படுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments