Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அன்னதானம் வழங்க ஏற்பாடு- 25க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில்

 


யாழ்ப்பாணம்- மல்லாகத்திலுள்ள அம்மன் ஆலயமொன்றில், இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட இருந்த அன்னதான நிகழ்வினை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.


மேலும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட 25க்கும் மேற்பட்டவர்களை குடும்பத்துடன் தனிமைப்படுத்தலுக்கு சுகாதார பிரிவினர் உட்படுத்தியுள்ளனர்.

இன்று காலை குறித்த ஆலயத்தில், அன்னதானம் வழங்குவதற்கான சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் மற்றும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு சென்ற அவர்கள், அன்னதான நிகழ்வினை தடுத்து நிறுத்தியதுடன் அதில் பங்குகொண்டிருந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments