Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு- புதூர் பிரதேசத்தில் 32 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது...!!

 


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுபான வியாபாரி ஒருவரை 32 மதுபான போத்தல்களுடன் இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பிரதேசத்தை இன்று பகல் பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 32 மதுபான போத்தல்களை பொலிஸார் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் புதூரைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments