Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலைய அனைத்து விசேட பூஜை வழிபாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

 


மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தின் விசேடபூஜைகள், சங்காபிசேகம், மற்றும் திருமணங்கள், நேர்த்திக்கடன்கள் போன்ற அனைத்து பூஜை வழிபாடுகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலனசபை தலைவர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினையடுத்து அரசாங்க அறிவித்தலையடுத்து இந்த தீர்மானத்தை நிர்வாக சபை எடுத்துள்ளது.

இதற்கு அமைய ஆலயத்தில் நித்திய பூஜை தவிர்ந்த ஏனைய விசேடபூஜைகள். சங்காபிசேகம், திருமணங்கள், மற்றும் நேர்த்திகடன்கள் பொங்கல்கள் உட்பட அனைத்து பூஜைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்.

அம்பாறை மாவட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள வேறு பிரதேசங்களில் இருந்து அதிகளவான பக்தர்கள் இந்த ஆலயத்தை தரிசிப்பதற்குவருவது அதிகம் எனவே பக்தர்கள் ஆலையத்திற்கு வருவதை முற்றுமுழுதாக தவிர்த்துகொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Post a Comment

0 Comments