Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு!

 




நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்திற்கு இணங்க சகல கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments