மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்ததிலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் மட்டக்களப்பு தனியார் பேருந்து உரிமையாளரும் மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறு உயிரிழந்தவர்கள் பரமேஸ்வரன் தனுயன், மற்றும் வினோகா துரைசிங்கம் என்ற இருவருமே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரது சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.




0 Comments