Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு- களுதாவளையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று (18) காலை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், சடலம் கிடப்பதை அவதானித்து, அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கிராம சேவை உத்தியோகத்தர் ஸ்தலத்துக்கு உடன் விரைந்ததுடன், களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன தலைமையிலாள பொலிஸ் குழுவினர், சடலத்தைப் பார்வையிட்டனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று மேற்படி சடலத்தை, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments