இலங்கையின் கொலைக் களங்களில் இறந்த பல்ஆயிரக்கணக்கானவர்களை நாம் நினைவுகூருகின்றோம், அத்துடன் குறிப்பாக தமது அன்புக்குரியவர்களை இழந்து உயிர்தப்பியவர்கள், மெனிக் பாமிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் ஆகியோரின் வேதனையையும் துன்பத்தினையும் நாங்கள் ஆழமாக உணர்ந்து கொள்கின்றோம். சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகியன இந்த முகாம்களில் பொதுவாகவே இடம்பெற்றது என்பதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் இது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு இப்போது தெரியும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் தலைவர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையு தமிழ் மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட்டுள்ளது:
12 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்காக இந்த செய்தியை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது உண்மையிலே எனது மனதைத் தொட்டுள்ளது. எனது சார்பாகவும் ,பிரான்சிஸ் ஹரிசன் மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்திலுள்ள எனது அனைத்து சக பணியாளர்கள் சார்பாகவும் நான் இந்த செய்தியை அனுப்புகின்றேன். 12 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் சமூகத்துடன் நாம் இணைந்து கொள்கின்றோம். இலங்கையின் கொலைக் களங்களில் இறந்த பல்ஆயிரக்கணக்கானவர்களை நாம் நினைவுகூருகின்றோம் அத்துடன் குறிப்பாக தமது அன்புக்குரியவர்களை இழந்து உயிர்தப்பியவர்கள், மெனிக் பாமிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் ஆகியோரின் வேதனையையும் துன்பத்தினையும் நாங்கள் ஆழமாக உணர்ந்து கொள்கின்றோம். சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகியன இந்த முகாம்களில் பொதுவாகவே இடம்பெற்றது என்பதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் இது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு இப்போது தெரியும்.
0 Comments