கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கோரவில்லை. அவ்வாறான சிங்களத் தலைவர்கள் எவரும் இல்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கோரவில்லை.
அவ்வாறான சிங்களத் தலைவர்கள் எவரும் இல்லை. எனினும் இலங்கையில் இடம்பெற்றமை இன அழிப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவேதான் நீதிகோரி சர்வதேசத்திடம் தமிழர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
வரலாற்று ரீதியாக ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமும் நடைமுறை அரசாங்கமும் தமிழ் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். சிறில் மெத்யு, காமினி பொன்சேகா, லலித் அத்துலத்முதலி உட்பட்டவர்களும் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போன்றோரும் தமிழர்கள் ஒடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
2006ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் குழந்தைகள் உட்பட்ட ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானொலி மற்றும் ஊடகங்கள் ஊடாக கூறி அந்த இடத்தில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
இன்று அவர்களை நினைவுகூரக்கூடுவதற்கு அனுமதியில்லை. அதனை விட முள்ளிவாய்க்காலின் நினைவேந்தல் இடம் இராணுவத்தினராலும் பொலிசாராலும் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட சப்பாத்து அடையாளங்கள் சாட்சிகளாக இருந்தன. இன்று நாடாளுமன்றத்தில் அதனைப் பற்றி பேசுவதற்கும் இடம் இல்லை.
தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டமை இனஅழிப்பு இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயங்கவேண்டும். 2009ஆம் ஆண்டு போரில் வெற்றிபெற்றதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் பொய்யான அறிவித்தலை ஒன்றை விடுத்தார்.
எனினும் அந்த வெற்றியின் பின்னர் நாட்டை சமானதானத்துக்கு கொண்டு செல்லாமை குறித்த அவர் எதனையும் கூறவில்லை. எனவே சிங்களவர்களால் தமிழர்கள் எதிராக இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டமைக்கு சர்வதேசத்திடம் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
0 Comments