Home » » காத்தான்குடியில் யாசகத்திற்கு தடை!

காத்தான்குடியில் யாசகத்திற்கு தடை!

 


காத்தான்குடியில் யாசகத்திற்காக வீடுகளுக்குச் செல்வது, வீதிகளில் அலைவது என்பன தடை செய்யப்பட்டுள்ளதுடன், இன்று செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த சகல வர்த்தக நிலையங்களும் மாலை 6 மணியுடன் மூடப்படுதல் வேண்டும் என காத்தான்குடி கொவிட்–19 தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.


தற்போது நாட்டில் கொரோனா 3ம் அலை தீவிரமாக பரவிவருவது தொடர்பில் சனிக்கிழமை (08) காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய பின்வரும் விடயங்களை பொது மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் யாசகத்திற்காக வீடுகளுக்குச் செல்வது, வீதிகளில் அலைவது என்பன தடை செய்யப்பட்டுள்ளதுடன், சதகா, பித்ரா விடயத்தில் பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஏழை எளியவர்கள், உறவினர்கள் தொடர்பில் முன்னுரிமை வழங்கவும்.
கடற்கரை, ஆற்றங்கரை, மைதானம் போன்ற பொது இடங்களில் பொது மக்கள் கூடுவது மறு அறிவித்தல் வரை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த சகல வர்த்தக நிலையங்களும் மாலை 6 மணியுடனும், அத்தியாவசிய சேவைகள் இரவு 9 மணியுடனும் மூடப்படுதல் வேண்டும்.

பெருநாள் ஒன்று கூடல்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்லல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |