Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அனாதைகளாக வீதியில் விடப்பட்ட தாய் தந்தை! மூன்று நாட்களாக வீதியில் தவிக்கும் பரிதாபம்

 


இலங்கையில் பெற்றோர்கள் மற்றும் வயோதிபர்களை துன்புறுத்துவதும், அவர்களை வீதியில் விட்டுச்செல்வது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

அந்த வகையில் தாய் தந்தை இருவரையும் வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தமது தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வயோதிபத் தாய் மற்றும் தந்தை வெல்லட்பிட்டி பகுதியில் கடை ஒன்றுக்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.

சுமார் 3 நாட்களுக்கு முன்னர் இவர்களை அவர்களது பிள்ளை கொண்டுவந்து விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது பிள்ளைகளின் அடையாளத்தைக் கூற குறித்த பெற்றோர் விரும்பவில்லை. ஆனால் அவர் ஹொரனையில் வசிப்பதாக கூறுகின்றனர்.

இதேவேளை, குறித்த தம்பதியினர் உதவியற்ற நிலையில் படுத்துக் கொண்டு, அப்பகுதி மக்கள் கொடுத்த உணவை சாப்பிடும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments