Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் நீடிக்கப்பட்டது பயணத்தடை! இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல்


மீண்டும் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இந்தப் பயணத் தடை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், நாட்டை இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்குமாறு சுகாதாரப் பிரிவினர் ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர்.

இந்நிலையிலேயே மீண்டும் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு சுகாதாரப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments