நடமாட்டக்கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் நாளை எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 4ஆம் திகதிகளில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக வெளியே செல்ல முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, வெளியே செல்லும் எந்தவொரு நபருக்கும் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் வீட்டுக்கு அருகில் உள்ள (நடந்து செல்லும் தூரத்திலுள்ள) வர்த்தக நிலையங்களில் மாத்திரமே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், அடையாள அட்டை இலக்க முறைமை நாளைய தினம் செல்லுபடியாகாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments