Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மது போதையில் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய கெப் ரக வாகனத்தின் சாரதி...!!

 


அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்கு உள்ளாக்கிய கெப் ரக வாகனத்தின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவர் அரச அதிகாரி ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

வாகன விபத்து தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மோட்டார் சைக்களில் மற்றுமொரு அதிகாரி உடன் பயணித்துக் கொண்டிருந்த போது அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி நேற்றைய தினம் (07) குறித்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மழையுடனான காலநிலை காரணமாக இத்தினங்களில் அதிக வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments