Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாட்டில் கொரோனா பாதிப்பு 120,000ஐ கடந்தது!

 


நாட்டில் மேலும் 1097 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 120521ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 878 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக 100763 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 745 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 18 ஆயிரத்து 13 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 928 776 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை 177 235 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments