Advertisement

Responsive Advertisement

இலங்கையில் மற்றுமொரு 35 வயது கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்குப் பலி!

 


நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை இன்றுடன் 4ஆக அதிகரித்துள்ளது.


அம்பாந்தோட்டை தெபரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தெபரவெவ சுகாதார பரிசோதகரான எம்.கே.பண்டார இதனை உறுதிசெய்தார்.

கொழும்பு – நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 35 வயது கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு பலியாகியிருக்கின்றார்.

Post a Comment

0 Comments