Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்: இஷ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

 


இஷ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் விழிப்புடன் இருக்குமாறும் பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு டெல் அவிவில் (Tel Aviv) உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.


காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான கலவரங்கள் மற்றும் மோதல்களால் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிக்கும் பொருட்டு தூதரகம் துரித எண்களையும் அறிமுகப்படுத்தியது.

அதன்படி, இலங்கையர்கள் கே.பி. சந்திரதிலகே, 058 6875764 அல்லது இண்டிகா சேனரத்ன, தொழிலாளர் மற்றும் நலன்புரி 055 9284399 ஆகிய எண்களுடன் தொடர்புகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments