முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டத்திலுள்ள 12 காவல் நிலையங்களாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் மே-18 முள்ளிவாய்க்கால் நினைந்வேந்தல் அனுஷ்ட்டிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த தடை பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு 27 பேருக்கு தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments