Home » » ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு கடந்த 24 மணி நேரத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று- பிராந்திய சுகாதார பணிப்பாளர் மயூரன்!!

ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு கடந்த 24 மணி நேரத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று- பிராந்திய சுகாதார பணிப்பாளர் மயூரன்!!

 


மட்டக்களப்பு மாவட்டம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.


இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேரில் 54 பேர் தொற்றுக்கு உள்ளானவர்கள் அறியமுடிவதுடன், வாழைச்சேனை பிரதேசத்தில், 129 ஆகவும் மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் 55 ஆகவும் குறிப்பிடப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று மரணமானது, 2.1 வீதமாகவும்தேசிய ரீதியில் 0.1 வீதமாக காணப்படுகின்றது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மடங்குக்கு மேலாக மரணவீதம் காணப்படுகின்றது. இதனால் மரண வீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாகவுள்ளதென கூறலாம் என்றார்.

எனவே மக்களாகிய நீங்கள் இதனுடைய ஆபத்து நிலையை அறிந்து கொண்டு சரியான இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணவேண்டும். கடந்த 24 மணித்தியாலத்தில் 28 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளது.

இருமல், தடுமல் சுவாச எடுப்பதற்கு கஷ்டமாக இருந்தால் உடனடியாக பக்கத்திலுள்ள வைத்தியரை நாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |