Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு-சின்ன ஊறணியில் 150 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை- 14 பேருக்கு தொற்று உறுதி...!!


மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தலில் உள்ள சின்ன ஊறணி பகுதியில் இன்று (23) கொரோனா தொற்றை கண்டறியும் முகமாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கிராமசேவகர் பிரிவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து அந்த பகுதி கடந்த 18 ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.

குறித்த அன்டிஜன் பரிசோதனையானது சின்ன ஊறணியை சேர்ந்த 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்டதில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை நடவடிக்கையானது மட்டக்களப்பு MOH கிரிசுதன் தலைமையில் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. இத்துடன் குறித்த பரிசோதனை நடவடிக்கைகளை பார்வையிட மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

Post a Comment

0 Comments