Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் 147 பகுதிகளில் மண்சரிவு அபாயம்

 


நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் மண்சரிவு அபாயம் மிகுந்த 147 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

றம்புக்கனை முதல் பதுளை வரையான மலையக ரயில் மார்க்கத்தில் 22 இடங்களும் இவற்றுள் உள்ளடங்குவதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பகுதிகளிலுள்ள ரயில் மார்க்கத்தில், நிலச்சரிவு மற்றும் கற்பாறைகள் வீழ்வதை தடுப்பதற்கு பாதுகாப்பான வேலிகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட அதிகாரியாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியுன் நிதியுதவியின் கீழ், மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments