நாடு எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடியையும் சமாளிக்க ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் முக்கியம் என்றும், நாடு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் நியாயமான சமுகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா தொற்றை உலக சுகாதார அமைப்பு (WHO) இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகின் மிக மோசமான நெருக்கடி என்று தெரிவித்துள்ளதாகவும் பேரழிவைத் தவிர்க்காவிடின் நாட்டின் எதிர்காலம் குறித்து எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரழிவைச் சமாளிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், அதேபோல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முரண்பட்ட அனைத்து சக்திவாய்ந்த நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த திசையில் முதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து தொற்றுநோயை சமாளிக்க ஒரு வலுவான பொறிமுறையை வகுக்க வேண்டும் என்றும் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.





0 Comments