Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மறைந்த நடிகர் விவேக்கின் பூதவுடலுக்கு, பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்!! (காணொளி )

 


மறைந்த நடிகர் விவேக்கின் பூதவுடலுக்கு, பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான சின்னக் கலைவாணர் விவேக், மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 4.35 அளவில் காலமானார்.

இதையடுத்து, அவரின் பூதவுடல், விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேநேரம், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், இரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், நடிகர் விவேக்கின் மறைவுக்கு, சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் விவேக்கின் பூதவுடல், இன்று மாலை விருகம்பாக்கத்தில் உள்ள மின்தகன சாலையில், தகனம் செய்யப்படவுள்ளதென அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.



Post a Comment

0 Comments