சுகாதார வழிகாட்டல்களை மீறுகின்றவர்களை கண்டுபிடிக்க விசேட நடமாடும் சேவையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கை இன்று மற்றும் எதிர்வரும் வார இறுதி நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புத்தாண்டு நிகழ்வுகள் உட்பட ஏனைய சந்தர்ப்பங்களிலும் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் கூடிய கரிசனை செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments