Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விபச்சாரத்தை சட்டமாக்கக் கோரும் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகே!

 


இலங்கையில் வெளிநாடுகளைப் போன்று இரவு வாழ்க்கை முறை ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகே தெரிவித்திருக்கின்றார்.


அவ்வாறு ஆரம்பிக்கப்படாவிட்டால் வெளிநாட்டவர்கள் எதற்காகத்தான் இலங்கைக்கு வருவார்கள் என்றும் அவர் நேற்று இடம்பெற்ற சமூக வலைத்தளத்தின் ஊடான நேர்காணலில் கலந்துகொண்டு வினவியுள்ளார்.

இவ்வாறான கலாசார முறையை ஏற்படுத்த பௌத்த மத தர்மமும், கலாசாரமுமே தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தைப் போல இலங்கையில் பொருளாதார முறையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிய அவர், தாய்லாந்து மிகப்பெரிய பௌத்த நாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments