Advertisement

Responsive Advertisement

கல்முனையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நுளம்பு பெருக்கம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு



(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

 நுளம்புகள் பெருகுவதை 
கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் கல்முனை  அல் ஸுஹறா  வித்தியாலயத்தில் 
கல்முனை அந்- நுஸர் திறந்த சாரணர் குழுவின்
ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.  அஸ்மி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர் ஜுனைட் ,, பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பாரூக் , சுகாதார பரிசோதகர்
அப்பாஸ் எம் நியாஸ் ,
சாரணிய உதவி மாவட்ட ஆணையாளர் (பயிற்சி )எஸ்.தஸ்தகீர் , உதவி மாவட்ட ஆணையாளர் ஹஸ்மின் புஹாரி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இங்கு பாடசாலை மாணவர்களின் முயற்சியுடன் நுளம்புகளின் பெருக்கத்தை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்குடன்
தேவையற்ற கொள்கலன்கள் , நுளம்பு பெருகக்கூடிய பொருட்கள் போன்றவற்றை அதிகமாக சேகரித்து  கொண்டு வந்த மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments