Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விவசாயிகள் கட்டாக்காலி மாடுகளினாலும் காட்டு யானைகளின் தொல்லையினாலும் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கைக்காக தமது வயல் நிலங்களை தாயார் செய்யும் விவசாயிகள் கட்டாக்காலி மாடுகளினாலும் காட்டு யானைகளின் தொல்லையினாலும் சொல்லொணா  துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

விவசாயிகள் எரிக்கும் வெயிலில் பகல் முழுவதும் வயலில் தயார்படுத்தி வைத்திருக்கும் வரம்புகளை மாலை வேளைகளில் மேய்ச்சலுக்காக வரும் கட்டாக்காலி மாடுகளும் , இரவு வேளைகளில் நீர் தேடி வரும் காட்டு யானைகளும் சேதப்படுத்திச் செல்கின்றன. இதனால் மறுநாள் மீண்டும் வரம்புகளை அமைக்க வேண்டியுள்ளதாகவும் அதற்காக வீணான பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாஙவும்  விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இவ்விடயமாக விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிட்டதாக விவசாயிகள் மேலும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments