(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை , சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் கழக பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர்ரும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிரதேச முக்கியஸ்தருமான றிஸ்லி முஸ்தபா ஒழுங்கு சேர்ந்திருந்த மேற்படி நிகழ்வில் கல்முனை , சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது இளைஞர்கள் தொடர்பான பல விடயங்கள் , இளைஞர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள், இளைஞர்களுடனான எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டன.
இதன்போது றிஸ்லி முஸ்தபாவின் இணைப்பு செயலாளர் அல் ஜவாஹிரும் கலந்து கொண்டிருந்தார்.
0 Comments