Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வ கடினபந்து கிரிக்கட் போட்டி



(  எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

சாய்ந்தமருதின் முதிசங்களான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின்  41 வருட  பூர்த்தியினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்து வீச சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகம் முன்வந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தினர் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.
சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் ஹஸீம் 32 ஓட்டங்களையும் றிப்கான் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் சார்பில் நெளபீல் 4 ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களை கொடுத்து 2  விக்கட்டுக்களையும் , முஹம்மது ஜலீல் 4 ஓவர்கள் பந்து வீசி 24  ஓட்டங்களை கொடுத்து  3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகத்தினர் 17.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்று 7 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றனர்.
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ்  விளையாட்டு கழகத்தின் சார்பில் பயாஸ் 62 ஓட்டங்களையும் , சர்ஜுன் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் ஹஸீன்  4 ஓவர்கள் பந்து வீசி 21 ஓட்டங்களை கொடுத்து 1  விக்கட்டினை கைப்பற்றி இருந்தார்.
இப்போட்டியில் ஆட்ட நாயகனாக சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் அணியை சேர்ந்த முஹம்மட் பயாஸ்  தெரிவு செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments