கொவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடையும் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு பிரதம மருத்துவர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலம் நிறைவின் பின்னர் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வடையும் எனவும் அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நடமாட்டம் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எதிர்வரும் வாரங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடையும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
0 Comments