Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புது வருடத்தில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை

 


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அந்த வகையிரல் இன்று (14ஆம் திகதி) சாமித்தோட்டமுனை, பூநகரி, குலைரெதம் மற்றும் சுண்டிக்குளி சரணாலயம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

Post a Comment

0 Comments