டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி இன்று டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை விலை 204 ரூபா 62 சதமாக அமைந்திருந்தது.
கடந்த ஒரு வாரக்காலமாக டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் சரிவடைந்து வருகிறது. இதனையடுத்து ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்தும் வைக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
எனினும் இன்றும் டொலருக்கு எதிரான ரூபா பெறுமதியில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது.
0 Comments