Home » » காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக பொதுச்சுகாதர பரிசோதகர்கள் நடவடிக்கை

காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக பொதுச்சுகாதர பரிசோதகர்கள் நடவடிக்கை

 


(எமது நிருபர் செ.துஜியந்தன்)



பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதாரப்பணிமனைகளினால் காலாவதியான பொருட்களைவிற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்க எதிராக பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரகின்றன.

இதற்கமைய மண்முனை தென் எருவில் பற்று பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் தொடர்ச்சியாக சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ். யோகேஸ்வரனின் ஒழுங்கமைப்பில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றன.

எதிர்வரும் சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு அதிகளவிலான மக்கள் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் காலாவதியான பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுவருகின்றன. இதனையடுத்து பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவைளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

இச்சுற்றி வளைப்புக்களில் மண்முனை தென் எருவில் பற்று பிராந்திய பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான கே.இளங்கோவன், எஸ்.சிவசுதன், எஸ்.ஜீவிதன், வி.கணேசன், ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |