Advertisement

Responsive Advertisement

2020 / 2021 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட பளுதூக்கல்

 


(  எம்.ஐ.எம்.அஸ்ஹர் )


2020 / 2021 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட  பளுதூக்கல் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதித்துவப்படுத்திய கழகங்களில் ஒன்றான BATTI EMPIRE (பற்றி எம்பயார்) விளையாட்டுகழகம் ஆண்கள் பிரிவில்  2 தங்கப்பதக்கங்களையும் , 1 வெள்ளிப் பதக்கத்தினையும் ,  , 1 வெண்கலப்பதக்கத்தினையும்  ,  பெண்கள் பிரிவில்  3 தங்கப்பதக்கத்தினையும் ,  , 2 வெள்ளிப்பதக்கங்களையும் ,  , 2 வெண்கலப்பதக்கங்களாக   மொத்தம் 11 பதக்கங்களை சுவீகரித்து கழகத்துக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அம்பாறை ,மட்டக்களப்பு  திருகோணமலை மாவட்ட வீர வீராங்கணைகள்  கலந்து கொண்ட  மேற்படி போட்டி அண்மையில்    திருகோணமலை நகராண்மை கழக மண்டபத்தில் நடைபெற்றது.
 பெண்கள் பிரிவில்  கலந்து கொண்ட வீராங்கனைகள் மட்டக்களப்பு மகாஜனா
கல்லூரி , மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி மற்றும்  மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர்
உயர்தர பாடசாலைகளைச் சேர்ந்த  மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
போதிய வளங்கள் இல்லாத நிலையிலும்  மட்டக்களப்பு மாவட்ட  வீர வீராங்கனைகள் இவ்வாறான சாதனைகளை ஏற்படுத்தியமை  வரவேற்கத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments