( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
நற்பிட்டிமுனை கிரிக்கட் கழகத்தின் புதிய கிரிக்கட் சீருடை அறிமுகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (9) நற்பிட்டிமுனை லீடர் அஸ்றப் விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட நற்பிட்டிமுனை லீடர் கழகம் முன்வந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நற்பிட்டிமுனை கிரிக்கட் கழகத்தினர் 18.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை பெற்றது.
நற்பிட்டிமுனை கிரிக்கட் கழகத்தின்சார்பில் ஜஸார் 18 ஓட்டங்களையும் ஹஸ்ஸான் 16 ஓட்டங்களையும் இஸ்மத் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் விதாத் 4 ஓவர்கள் பந்து வீசி 7 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுக்களையும் , முஹம்மது சல்பி 4 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களையும் இல்யாஸ் அஸீஸ் 3.4 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தினர் 7.3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களை பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் அணியை சேர்ந்த உபைத் ஷா ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
0 Comments