உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பரிசாக மேலும் 250,000 டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளது.
அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை கூறினார்.
கொரோனா தடுப்பூசி மருந்தை, வளரும் நாடுகளுக்கு விநியோகிக்கும் அமைப்பே “கோவக்ஸ்” ஆகும்.
உலக சுகாதார நிறுவனம் கோவக்ஸ் அமைப்பு வாயிலாக ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை விநியோகம் செய்ய உள்ளது.
அந்த வகையிலேயே இலங்கைக்கும் 250,000 டோஸ் கொரோனா தடுப்பூசி கிடைக்கப்பெற உள்ளது.
0 Comments