Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜெனிவாவில் இலங்கையின் கோரிக்கை நிராகரிப்பு- கடும் சீற்றத்தில் அரசாங்கம்


 கடந்த வாரம் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை குறித்த அரசாங்கத்தின் பதிலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் புறக்கணித்துவிட்டதாக இலங்கை தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பதில்களையும் இணைத்து ஆணையாளரின் அறிக்கையுடன் வெளியிடுமாறு ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நஷாத் ஷமீமுக்கு எழுதிய கடிதத்தில் கோரியிருந்தார்.

இருப்பினும் குறித்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு திருத்தப்படாத அறிக்கை பேரவையின் 46ஆவது அமர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக ஆட்சேபனை வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 27 அன்று இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் முன்கூட்டியே திருத்தப்படாத பதிப்பு குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கைக்கான தூதுவரும் நிரந்தர பிரதிநிதியுமான சி.ஏ. சந்திரபிரேம சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மனித உரிமைகள் பேரவை உட்பட எந்தவொரு நிறுவனமும் உறுப்பு நாடு பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டால், அத்தகைய அறிக்கை சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பதில்களையும் இணைத்தே வெளியிடப்பட வேண்டும் என சுட்டிக்காட்டபட்டிருந்தது.

Post a Comment

0 Comments